சிமியோன் SIMEON 54-08-04 வில்லியம் மரியன் பிரான்ஹாம் சிமியோன் SIMEON லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா 54-08-04 1. ... எனவே ஆராதனையில் என்னுடைய பாகமானது தவறாமல் இருக்கும் என்று நான் அறிவேன், அது... தேவனுடைய வார்த்தை வெறுமையாகத் திரும்பாது, நான் அவருடைய வார்த் தையில் சிலவற்றை வாசிக்கப் போகிறேன். நாம் 25-வது வசனத்தை வாசிப்போம்: (லூக்கா 2:25-26) அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்;... அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத் திருக்கிறவனாயும் இருந்தான்;... ...கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரண மடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவ னுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. கர்த்தர் தம்முடைய வார்த்தையின் வாசிப்பிற்கு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 2.இப்பொழுது, மிகவும் கொஞ்ச நேரம் நம்முடைய பாடத்தைப் பேச விரும்புகிறோம். சென்ற சாயங்கால வேளையில், நான் என்னையே மறந்து பிரசங்கிக்கத் தொடங்கினேன், ஏனெனில், மிகவும் அருமையான ஆவி அங்கே இருந்தது, நாம் அப்படியே ஒரு மகிமையான தருணத்தைக் கொண்டிருந்தோம். இந்த யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் செல்வதைக் காணும் போது, இப்பொழுதிலிருந்து ஒரு சில வாரங்களைத் தவிர வேறொன்றும் இருக்கப் போவதில்லை என்பதை அது எனக்கு நினைவுபடுத்து கிறது. கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவ்விதமாகவே போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே என்னிடம் ஒரு தரிசனம் உள்ளது, நான் அங்கு போகும் போது என்ன சம்பவிக்கும் என்பது சம்பந்தமானவற்றை நாளை இரவு உங்களிடம் கூற விரும்புகிறேன். உங்கள் வேதாகமத்தின் பின்பக்கத்தில் ஒரு தனித்தாளிலோ அல்லது ஏதோவொன்றிலோ அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் (அது அவ்விதமாக இருக்கிறதா இல்லையாவென்று கண்டு கொள்ளுங்கள்; பாருங்கள் - அது அவ்விதமாகவே சம்பவிக்கிறதா என்று பாருங்கள்.) 3.சகோதரன் ஜாகர்ஸூம் அவர்களில் மற்ற அநேகரும் ஒரு ஒளிபரப்புக்காக ஏறக்குறைய கிறிஸ்துமஸ் நெருங்கும் நேரத்தில் பாலஸ்தீனாவில் இருக்கப் போகிறார்கள். நான் அங்கே இருக்க வேண்டுமென்று அழைக்கப்பட்டுள்ளேன், தேவனுடைய கிருபையினாலும் ஒத்தாசையினாலும், கிறிஸ்துவுக்கான இந்த மகத்தான சிலுவைப் போரில் உதவிபுரியும்படி, நான் அச்சமயத்தில் அங்கிருப்பேன். நான் எப்பொழுது திரும்பி வருவேன் என்பதை அறியாதவனாக அங்கு போகிறேன். நான் நேரத்தைக் குறிக்கவில்லை. அவஞ, 'முடிந்தது' என்று கூறுகிற வரையில், நான் அப்படியே தங்கியிருக்கப் போகிறேன், அதன்பிறகு திரும்பி வருவேன். 4.அன்பின் காணிக்கையைக் கொடுக்கிற உங்கள் ஒவ் வொருவருக்கும் அதில் ஒரு பாகமுண்டு... அங்கு போவதற்கு எனக்கு மிஷனரி காணிக்கை கொடுப்பவர்கள். நண்பர்களே, அதற்காகத்தான் அது செலவிடப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன். என்னிடம் மீதியிருக்கும் ஒவ்வொன் றைக் கொண்டும் பசியாயுள்ள அந்த ஜனங்களைப் போஷிப்பேன். உங்கள் பணத்தை (அதைக் காட்டிலும்) எந்த சிறந்த காரியத்திற்கும் உங்களால் கொடுக்க முடியாது என்பதில் நான் நிச்சய முள்ளவனாயிருக்கிறேன். நான் அதை மெச்சுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி. 5.நான் ஒரு ஏழை மனிதன், என்னுடைய கூட்டங்களைக் குறித்து உங்களுக்குத் தெரியும்; அது ஒரு பண விவகாரம் அல்ல, எவரும் அதை அறிவார்கள். நான் - நான் அதிலிருந்து தொடர்ந்து சுயாதீனமாக இருக்கிறேன், நான் தொடர்ந்து எப்போ துமே அவ்விதமாகவே இருக்கும்படி நோக்கம் கொண்டுள்ளேன். வேறு யாரோ ஒருவருக்கு உதவி செய்யும்படியான காரியம் தான் என்னுடைய இருதயத்தில் உள்ளது... அது அவ்விதமான இருதய மாக உள்ளது. கொடுப்பதுதான் மிகப்பெரிய ஆசீர்வாதமாக உள்ளது. பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் கொடுப்பதே பெரியது. 6.ஒரு பென்னி காணிக்கை கூட இல்லாத கூட்டங்களையும் மற்றவற்றையும் கொண்டிருக்கும்படி எனக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடுமானால், நான் அதை நடத்துவேன்; ஆனால் என்னால் முடியாது. நான் அப்படியே ஜனங்களுடைய நன்கொடை யைக் கொண்டு மட்டுமே ஜீவிக்கிறேன். நீங்கள் அதை அறிவீர் கள். நான் எங்கே ஜீவிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், அதைக் குறித்த எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள். அதை - அதை எந்த நேரமும் விசாரணை செய்ய முடியும். சில சமயங்களில் வங்கியில் 50 சென்டுகள் கூட மீதியில்லாமல் ஒரு கூட்டத்திலிருந்து வேறொரு கூட்டத்திற்குச் செல்லுகிறேன். ஒரு வேளை மிகைப்படுத்தி பேசும் விதமாக இது இருக்கலாம், ஆனால், அதில் நான் மற்றவர்களுக்கு உதவி செய்யவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 7.அவையெல்லாவற்றிற்கும் பிறகு, நான் எதிர்நோக்கியிருக்க வேண்டியதெல்லாம் இந்த பூமியாக இருக்குமானால், நான் பூமிக்குரிய காரியங்களையே கவனித்துக் கொண்டிருப்பேன். ஆனால் மேலான காரியங்கள் மேல் நேசத்தை வைத்திருக் கிறேன், அங்கே தேவன் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். மேலும் ஏதோவொரு நாளில் என்னுடைய உக்கிராண வேலைக்காக நான் அவருக்கு முன்பாக பதில்கூறியாக வேண்டும். அவருடைய ஜனங்கள் கொடுத்திருக்கிற பிரகாரமாக, அது என்னிடம் கொடுக்கப்பட்டபடியே, அதை தேவனுடைய மகிமைக்காக இலவசமாகக் கொடுக்கவே விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் ஜெபிப்போம். 8.பிதாவே, இன்றிரவு உம்முடைய வேதாகமத்திலிருந்து வாசித்த இந்த சில வார்த்தைகளை நீர் ஆசீர்வதிக்க வேண்டு மென்று நான் ஜெபிக்கிறேன். எங்களுக்கிருக்கிற எல்லா பாடல்கள் மற்றும் ஆராதனைகளையும் ஆசீர்வதியும். மேலும் இப்பொழுது, சிறிது நேரத்தில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக் கும்படி நாங்கள் ஏற்பாடு செய்துள்ளபடி, உம்முடைய பரிசுத்த ஆவியானவர், அது இருந்த பிரகாரமாக, மகத்தான பெரிய செட்டைகளுடன் இக்கட்டிடத்தில் பரவிச்சென்று, துளித்துளியாக கசிந்து வடிகிற இரக்கம் மற்றும் சுகமளித்தலின் பனித்துளிகள் இந்த இரவு நேரத்தில் ஒவ்வொரு நபரின் மேலும் துளித்துளியாக பொழியப்படுவதாக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 9.வெறுமனே ஜெப அறையை விட்டு வெளியேறி பேசுவதற்கு ஒரு வார்த்தையும் இல்லாமல் இங்கே வருகிறேன், நேரே உள்ளே நடந்து வந்து, சகோதரன் ஜாகர்ஸோடு கரங்களைக் குலுக்கி, மேடைக்கு வருகிறேன். நான் பேச சிறிது நேரத்தை அது எடுத்துக் கொண்டது. இந்தக் கட்டிடத்திற்குள் ளிருக்கும் ஜனங்களுடைய உணர்வுகளை நான் ஒருவிதமாக சரிசெய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர் களானால், அப்படியே சிறிது நேரம் அந்த நோக்கத்திற்காக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 10.இப்பொழுது, நான் சிமியோனைக் குறித்துப் பேசப் போகிறேன். கர்த்தராகிய இயேசு முதல்தடவை வருவதற்கு சற்று முன்பதாக இருந்த அந்த நாளில் ஜீவித்த ஒரு-ஒரு வயதான பரிசுத்தவான்தான் (sage) சிமியோன். தேவன் தமக்கு ஒரு சாட்சி இல்லாமல் ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தமது விரலை ஒருநபர் மீது வைத்திருக்கக்கூடியதான யாரோ ஒருவரை அவர் எப்போதுமே இப்பூமியில் கொண்டிருக்கிறார். அநேகமாக ஒரு நபரிடம் அவர் இறங்கி வருகிறார், ஆனால் அவர் தமது விரலை ஒருநபர் மீது வைத்து, 'இது என் தாசன்' என்று சொல்லும்படியான யாரோ ஒருவரை அவர் எப்போதுமே கொண்டிருந்தார். ஏன், அச்சமயத்தில் ஒரு சிலரே அவருக்கு மீதியாயிருந்தனர். 11.இஸ்ரவேலர் பிரிந்து போய் பின்வாங்கிப்போய் அவர்கள் போய் விட்டிருந்தனர், தேவன் அவர்களை ஆக்கினைக்குட் படுத்தியிருந்தார். இச்சமயத்தில் அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர், எருசலேம் ரோமர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. கர்த்தராகிய இயேசு முதல் தடவை வருவதற்கு சற்று முன்பாக, யூதர்களுக்கு அது மிகவும் துக்ககரமான ஒரு நேரமாக இருந்தது. 12.ஆனால் ஏதோவொன்று சம்பவிப்பதற்காக எதிர்நோக் கியிருந்த ஜனத்தில் மீதியானவர்களை அவர் கொண்டிருந்தார்; எவ்வளவு நாட்கள் கடந்து போனாலும் காரியமில்லை, எவ்வளவு காலங்கள் கடந்து போனாலும் காரியமில்லை, அவர்கள் இன்னும் இஸ்ரவேலின் ஆறுதலுக்காக காத்திருந்தனர். குருடான தீர்க்கதரிசியாய் ஆலயத்திலிருந்த அன்னாளைப் போல. அந்த வயதான பரிசுத்தவானாகிய (sage) சிமியோன் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருந்தான்; யோவான் ஸ்நானன் அவருக்காக காத் திருந்தான்; அங்கிருந்த மற்ற அநேகரும், அல்லது சரியாகச் சொன்னால் மீதியானவர்கள் அவர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்; சகரியாவும் எலிசபெத்தும் அவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்ருந்தனர். 13.ஒரு மகத்தான கவுரவத்தைக் கொண்டிருந்த இந்த வயதான மனிதனின் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். பரிசுத்த ஆவியானவர் ஒருநாள் அவனிடம், 'சிமியோனே, நீ கிறிஸ்துவைக் காணுமுன்னே, நீ மரணத்தைக் காணப்போவதில்லை' என்று கூறினார். அவன் அதை விசுவாசிப்பதற்கு ஒரு நல்ல காரணத்தை அவன் கொண்டிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவ்வாறு கூறியிருப்பாரானால், அது அவ்விதமே இருக்கப் போகிறது. தேவன் கூறுவது எதுவாக இருந்தாலும், அது சரியே. இப்பொழுது, சிமியோன் தேசத்தைச் சுற்றிலும் சென்று, 'உங்களுக்குத் தெரியுமா, நான் கிறிஸ்துவைக் காணுமட்டும் மரிக்கப் போவதில்லை' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. 14.இப்பொழுது, ஜனங்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடியும். அவர்கள், 'நல்லது, அந்த பரிதாபமான வயதான மனிதனுக்கு ஏதோ மனநிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. பாருங்கள்? அவர் சரியாயில்லை, ஏனெனில், ஏன், பாருங்கள், தாவீது அவருக்காகக் காத்திருந்தான், தீர்க்கதரிசிகளும் அவருக்காகக் காத்திருந்தனர். நாம் எப்பொழுதும் இருந்ததிலேயே மோசமான நிலையில் இங்கே இருக்கிறோம். பெரும் அடிமைத்தனத்திலும், எல்லாவற்றிலும் நாம் இருக்கிறோம். அவர் எவ்வாறு கிறிஸ்துவைக் காணப் போகிறார்? இப்பொழுது அவர் இங்கே 80 வயது அல்லது அதற்கும் அதிக வயதானவராகவும், கல்லறைக்கு ஒரு அடி தூரத்திலும் இருக்கி றார்; இருப்பினும், அவர் சுற்றிலும் சென்று, அதைக் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் எங்கேயோவுள்ள மாயையான காரியத்தைப் பெற்று இதைச் செய்ய வேண்டும்' என்று கூறினர். பெரும்பாலும் எப்போதுமே, ஜனங்கள் உண்மையாகவே தேவனை நம்பும்போது, அவர்கள் - அவர்கள் ஏதோவொரு வகையான மாயையில் கிரியை செய்கிறார்கள் என்றோ அல்லது ஏதோவொரு மதவெறி அல்லது ஏதோவொன்றில் கிரியை செய்கிறார்கள் என்றோ அவர்கள் நினைக்கிறார்கள். 15.அந்த நாளில் ஆலயத்திலிருந்த அன்னாளைப் போல. அவள் உள்ளே வந்தாள், அந்த ஸ்திரீகள் தங்களுடைய தொப்பி களை எவ்வாறு அணிந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்படியாக அவள் ஆலயத்திற்குப் போகவில்லை. புதிய வீட்டை கட்டுபவர்களைக் குறித்தோ, அடுத்த வருடம் எம்மாதிரியான ஆடைகள் ஃபேஷனாக இருக்கும் என்பதைக் குறித்தோ பேச அவள் விரும்பவில்லை. அவள் ஆலயத்திற்காக - சரியாக பலிபீடத்தண்டை (போவதற்காக) நேரான வழியை உண்டாக்கினாள். அவள் அங்கே முகங்குப்புற விழுந்து, அவள் குடித்திருந்தாள் என்று ஆசாரியன் கூட நினைக்கும் அளவுக்கு அவள் ஜெபித் தாள். அவள் குடித்திருக்கவில்லை; அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாள். 16.இன்றுள்ள அநேக ஜனங்களுடனான வழிமுறைகளும் அதுதான்: அவர்கள் குடித்தவர்களாகவோ அல்லது வெறிபிடித்த வர்களாகவோ இல்லை, அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றனர், அதாவது, அவர்கள் வெறுமனே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். நீங்கள் ஆவிக்குரிய காரியங்களுக்குள் வரும்போது... உலக காரியங்கள்... ஏன், அவைகள் - ஆவிக்குரிய காரியங்கள் உலகப்பிரகாரமான சிந்தைக்கு மாம்ச பிரகாரமாகத் தோற்றமளிக்கிறது. 17.எனவே சிமியோன் அம்மாதிரியான ஒரு மனிதனாக இருந்தான். ஆனால் ஜனங்கள் அவனைக் குறித்து என்ன கூறினாலும் பரவாயில்லை, அவன் கிறிஸ்துவைக் காணப் போகிறான் என்று இன்னும் விசுவாசித்தான், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவனிடம் அவ்வாறு கூறினார். இப்பொழுது, அது ஒரு நல்ல வழியாயிருக்கிறது. 18.பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் எதையாவது கூறி, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போவதாக வெறுமனே விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். அதற்கு எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை, அவர் அதைக் கொண்டுவர நிச்சயமுள்ளவராயிருக்கிறார். அவர் அப்படியே அதைச் செய்தாக வேண்டும், ஏனெனில் அவர் அதைச் செய்யப்போவதாகக் கூறினார். 19.அந்த வயதான மனிதன் சுற்றிலும் போய், சாட்சிகூறி, தான் கிறிஸ்துவை காணும் மட்டுமாக இப்பொழுது மரிக்கப்போவ தில்லை என்று ஜனங்களிடம் கூறிக்கொண்டிருப்பதை என்னால் சற்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மேலும் அவன் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். நீங்கள் இன்றிரவு ஏதோவொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் எதிர்பார்ப்பதைப் பெற்றுக் கொள்வீர்கள். அது சரியே. 20. ... நீங்கள் வந்து, 'உங்களுக்குத் தெரியுமா, அந்த முழு சுவிசேஷ கூட்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களில் ஏதோ தவறுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் சென்று அதைக் கண்டுகொள்ளப்போகிறேன் என்று நம்புகிறேன்' என்று கூறலாம். கவலைப்பட வேண்டாம், பிசாசு அதை உங்களுக்குக் காண்பிப்பான், உ-உம், ஆம், நீங்கள் - நீங்கள் ஏராளமான தவறுகளைக் காண்பீர்கள். நீங்கள், 'நல்லது, இந்த ஆள் சத்தமிடாமல் இருக்க வேண்டும். இந்த மனிதன் அந்நிய பாஷையில் பேசாமல் இருக்க வேண்டும். பிரசங்கியார் அவர் செய்ததைக் குறித்து சொல்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் சரியாக உடையணிந்திருக்கவில்லை' என்று சொல்லலாம். நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கும்படி ஏராளமானவற்றை அவன் உங்களுக்கு அப்படியே காட்டுவான். நீங்கள் குற்றம் கண்டுபிடிக் கும்படியாக எதிர்பார்த்து வந்திருந்தால், அவன் உங்களுக்குக் காண்பிப்பான். 21.ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்த்து வந்திருந்தால், தேவன் அதைக் காண்பிப்பார். நீங்கள் எதிர்பார்ப்பதையே பெற்றுக்கொள்வீர்கள். இன்றிரவு நீங்கள் சுகமடைய வேண்டுமென்று எதிர்பார்த்தால், நீங்கள் சுகமடைந்தவர்களாக வீட்டிற்குச் செல்வீர்கள். அது துளிகூட பிசகாமல் சரியே. நீங்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால். ஆனால் நீங்கள் முதலாவது எதிர்பார்த்தல்களின் கீழாக இருக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 22.அதன் காரணமாகத்தான் அந்த நாட்களில் சாஸ்திரி களை வழிநடத்தின நட்சத்திரத்தை சாஸ்திரிகளைத் தவிர யாரும் பார்க்கவில்லை: ஏனெனில் அதைக் காணும்படி அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த நட்சத்திரத்திற்காக எதிர் நோக்கியிருந்தனர்... (அந்த நட்சத்திரம்) உதிக்கும்படி. யாக்கோபிலே ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று பிலேயாம் தீர்க்கதரிசி சொன்னான். அவர்கள் சாஸ்திரிகளாகவும், ஜோசியராகவும் (astrologers), மற்றவர்களாகவும் இருந்தனர், அவர்கள் - அவர்கள் அந்த நட்சத்திரத்தை எதிர் நோக்கியிருந்தனர். அவர்கள் அதை எதிர் பார்த்திருந்தனர், அதன் காரணமாகத்தான் அவர்கள் அதைக் கண்டனர். 23.நீங்கள் கர்த்தருடைய வருகையைக் காணும்படி எதிர் நோக்கியிருந்தால், சந்தேகமேயில்லை, ஆனால் என்ன, நீங்கள் அதைக் காண்பீர்கள். தேவன் உங்களை சுகமாக்கப் போகிறார் என்று இன்றிரவு நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டும் விசுவா சித்துக் கொண்டும் இருந்தால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள் வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் அது, நீங்கள் எதைக்கேட்டாலும், ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி அதை விசுவாசித்தால், தேவன் அதை உங்களுக்கு அருளுவார். 24.மேலும் இப்பொழுது, இது எருசலேமில் சம்பவிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது: யூதேயாவின் மலைகளில் அந்தக் குழந்தை பிறந்தது; ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில் அது பிறந்தது; வெளியே கொஞ்சம் மேய்ப்பர்கள் இருந்தார்கள். இப்பொழுது, அவர் இறங்கிச் சென்று, அந்த எல்லா பிரதான ஆசாரியர்களிடமும் அதைச் சொல்லவில்லை, அல்லது, அந்த தூதர்கள், சபையிலோ அந்த நாளின் மகத்தான அமைப்புகளிலோ விஜயம் செய்து, 'இப்பொழுது, இரட்சகராகிய கிறிஸ்துவை நாங்கள் கொண்டு வந்தோம்' என்று கூறவில்லை. அது வெளியே அந்த மலைப்பகுதியில் இருந்த ஏழ்மையான, தாழ் மையான மேய்ப்பர்களிடம் விஜயம் செய்தது. மேலும்... தூதர்கள், மிகவும் படிப்பறிவு இல்லாத, ஏழ்மையான ஜனங்களிடம் பாடி, 'இன்று இராஜாவாகிய கிறிஸ்து தாவீதின் ஊரிலே பிறந்திருக் கிறார்' என்றனர். 25.மேலும் நாம் கவனிக்கிறோம், அந்த நாளில், செய்தி களை அனுப்புவதற்கு நமக்கு இன்று இருப்பது போல, தொலைப் பேசி, தொலைக்காட்சி, மற்றவைகள் போன்ற பத்திரிகைத் துறை (press) ஒன்றும் கிடையாது. அது அப்படியே உதட்டிலிருந்து காது வழியாக செய்தி அனுப்பப்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தி ருந்தது அல்லது சரியாகச் சொன்னால் கிறிஸ்து பிறந்திருந்தார் என்ற (செய்தி) ஒருவேளை எருசலேமுக்குள் இன்னும் பரவியிருக்கவில்லை. 26.ஆனால், அது - அது ஆலயத்தில் திங்கள் கிழமை காலை நேரமாக உள்ளதாக, நாம் அதை எடுத்துக் கொண்டு பேசலாம். அநேகமாக அச்சமயத்தில் எருசலேமில் அல்லது பாலஸ்தீனாவைச் சுற்றிலும் இரண்டு மில்லியன் யூதர்கள் இருந் தனர். ஒருவேளை குறைந்தது 150 அல்லது 200 குழந்தைகள் ஒவ்வொரு இரவும் அங்கே பிறந்திருக்கலாம், சிறு ஆண் குழந்தைகள் எட்டாவது நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டியிருந்தது. அவர்கள் சுத்திகரிப்பிற்காக ஒரு காணிக்கை கொடுக்க வேண்டியிருந்தது. நல்லது, அது திங்கட்கிழமை காலை நேரமாக இருப்பதாக கூறுவோம், நாம் முடிக்கும் நேரத்தில், சிறிது நேரம் ஒரு சிறு நாடகத்திற்காக அதைக் குறிப்பிடுவோம். திங்கள் காலையில் ஆலயத்தின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது, ஜனங்கள் வந்து போய்க் கொண்டும், முன்னும் பின்னுமாக நெருக்கிக் கொண்டும், பலி செலுத்திக் கொண்டும், மற்றவைகளைச் செய்து கொண்டும், இருக்கிறார்கள். 27.கிறிஸ்துவைக் காணப் போவதாக பரிசுத்த ஆவியான வர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்த நம்முடைய சிநேகிதரான சிமியோனை நாம் கற்பனை செய்வோம். அவன் கொஞ்சம் வயதான போது, 'நல்லது, தேவனே, நீர் எனக்கு அதை வாக்குத்தத்தம் பண்ணினீர், நான் அதைக் காண்பேனென்று விசுவாசிக்கிறேன்' என்று வியப்படையத் தொடங்குவதாக நான் கற்பனை செய்கிறேன். அவன் அதைக் காணும்படிக்கு பசியாக வும் தாகமாகவும் இருந்தான். அவன் கிறிஸ்துவைக் காணப்போகிறான் என்று அவனிடம் கூறின ஏதோவொன்று அவனுக் குள்ளாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். 28.தாவீது, 'மதகின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது' என்று கூறினது போல. ஆழம் ஆழத்தை நோக் கிக் கூப்பிடும் போது, அந்த அழைப்புக்குப் பதிலளிக்க ஒரு ஆழம் இருக்க வேண்டும். உங்களுக்கு அது தெரியுமா? இங்கே உள்ளேயுள்ள ஏதாவது ஏதோவொன்றிற்காக அழைத்துக் கொண் டிருக்குமானால், அந்த அழைப்புக்கு பதிலளிக்க ஏதோவொன்று இருக்க வேண்டும். 29.நான் அடிக்கடி இதைக் கூறுவதுண்டு, 'மீனின் முதுகில் துடுப்பு இருந்ததற்கு முன்பே முதலாவது அது நீந்துவதற்கு தண்ணீர் இருக்க வேண்டும் அல்லது அதற்கு ஒருபோதும் துடுப்புகளே இருந்திருக்காது' என்று இதைக் குறித்து பேசுவதுண்டு. அது சரியே. பூமியில் ஒரு மரம் வளரு வதற்கு முன்பே அது வளருவதற்கு ஒரு பூமி இருக்க வேண்டும், அல்லது ஒரு மரமானது அங்கே ஒருபோதும் இருந்திருக்காது. 30.இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறு குழந்தை ஒரு பென்சிலில் இருந்த ரப்பர்களையும், அழிப்பான்களையும் தின்னுவதாகவும், மிதிவண்டியிலுள்ள மிதிகட்டையை தின்பதாகவும், அவன் காணக் கூடிய எல்லா ரப்பரையும் தின்பதாகவும் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், அவர்கள் அவனை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று அவனைப் பரிசோதித்தனர். அவனுடைய சிறிய சரீரத்திற்கு கந்தகம் தேவைப்படுவதை கண்டுபிடித்தனர். ரப்பரில் கந்தகம் உள்ளது. பாருங்கள், இங்கே கந்தகத்திற்காக அழைத்துக் கொண்டிருக்கும் ஏதோவொன்று இருக்குமானால், அந்த அழைப்பிற்குப் பதிலளிக்க ஒரு கந்தகம் இருக்க வேண்டும். அங்கே இருக்குமானால்... 31.இங்கே ஒரு சில வருடங்களுக்கு முன்பு, முதலாவது சீர்திருத்தத்திற்குப் பிறகு, சபையானது ஆங்கிலிக்கன் சபைக்குள் தணிந்து போன போது, ஜனங்கள் பசிதாகம் கொள்ளத் தொடங்கினர். மார்டின் லூத்தரின் சீர்திருத்தத்திற்குப் பிறகு, நீதிமானாக் கப்படுதலைக் காட்டிலும் தேவனைக் குறித்து இன்னும் கூடுத லானதிற்காக, அவர்கள் தேவனுக்காகப் பசியடையத் தொடங்கினர். 32.தேவன் ஜான் வெஸ்லி என்று அழைக்கப்படுகிற ஒரு மனிதனை எழுப்பி, பரிசுத்தமாக்கப்படுதலைப் பிரசங்கித்தார். அங்கே பரிசுத்தமாக்கப்படுதல் இருந்ததென்று அவர்கள் விசுவா சித்து, அது வார்த்தையில் இருந்ததால், அவர்கள் அதை விசுவா சித்து, பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்றுக் கொண்டனர். 33.அதன்பிறகு, மெதொடிஸ்டுகளாகிய அவர்கள் குளிர்ந்து போகத் தொடங்கின போது, ஜனங்கள் இன்னும் தேவனுக்காகப் பசியாயிருந்தனர். அவர் பெந்தெகோஸ்தே காரர்களை எழுப்பினார், அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்களுக்குக் கொடுத்தனர். 34.இப்பொழுது, பெந்தெகோஸ்தேயினர் குளிர்ந்து போய் விட்டனர். தேவன் அதே விதமாகவே புதிய ஒன்றுக்குச் செல்கிறார். பாருங்கள்? ஏனெனில் ஜனங்கள் இன்னுமாக அடையாளங்களுக்காகவும், அற்புதங்களுக்காகவும், தேவனுக் காகவும் பசி தாகம் கொண்டுள்ளனர். 35.நீங்கள் தேவனுக்காக இன்னும் அதிகமாக பசியடைவது எவ்வளவு நிச்சயமோ, அந்த அழைப்புக்குப் பதிலளிக்க அங்கே தேவனுடைய அதிகமான காரியங்கள் சூழ்ந்திருக்க வேண்டும் என்பதும் நிச்சயம். அது அப்படியே மிகச்சரியாக இருக்கிறது. நீங்கள் பசியாயிருக்கும் போது, அது அங்கே இருக்க வேண்டும். 36.மேலும் இப்பொழுது, சிமியோன் பரிசுத்த ஆவியா னவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதைக் காண பசியாயிருந்தான். அந்த மகத்தான பிரமாண்டமான ஆலயத்தில் அவன் பின்னால் ஜெப அறையில் இருப்பதை என்னால் காண முடிகிறது, அந்தக் காலை வேளையில் ஜனங்கள் வருவதும் போவதுமாயிருந்தனர். நாம் பேசிக் கொண்டிருக்கும் நம்முடைய - நம்முடைய மனிதனாகிய சிமியோனை நாம் காண்பதாக கற்பனை செய்வோம், அவன் பின்னால் அறையில் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் அந்நாட்களில் கொண்டிருந்தது போன்ற புஸ்தகச் சுருளில் ஏசாயா புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறான்: 'நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்தோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்' மேலும் அதைப் போன்றவற்றை வாசித்துக் கொண்டிருந்தான். 37.இப்பொழுது, நாம் அந்த ஆலயத்தை நோக்கிப் பார்த்து, என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காணலாம். ஜனங்கள் வருவதும் போவதுமாயிருப்பதை நான் காண்கிறேன். சிமியோன் உள்ளே இருந்து, வாசித்துக் கொண் டிருக்கிறான். அங்கே பின்னால், அந்தக் காலை வேளையில், நீண்ட வரிசையில் ஸ்திரீகள் நிற்பதை நான் காண்கிறேன், விருத்தசேதனம் பண்ணப்படுவதற்காக தங்களுடைய சிறிய குழந்தைகளுடன் ஏறக்குறைய 200 ஸ்திரீகள் அங்கே நெடுகிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்... அதற்காக காணிக்கையை வைத்திருந்தனர்: அது ஒரு ஐசுவரியமான குழந்தையாக இருந்தால், ஒரு ஆட்டுக்குட்டியை காணிக்கையாகக் கொடுக்கலாம்; அது ஏழை குழந்தையாக இருந்தால், ஒரு ஜோடிக் காட்டுப் புறாக்களை காணிக்கையாகக் கொடுக்கலாம். 38.அந்த வரிசையினூடாக, ஏறக்குறைய 18 வயதான - அதற்கு மேல் இருக்காது - ஒரு சிறு வாலிப ஸ்திரீ தன்னுடைய முகத்தின் மேல் சிறு முகத்திரையைக் கொண்டவளாய் நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அவள் ஒரு... யைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் ஒழுக்கமாக உடையுடுத்திக் கொண்டு, சிறு குழந்தையை கதகதப்பான துணியில் பொதிந்து, தன்னுடைய கரங்களில் அதை சுமந்தவளாய், அவள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். 39.அந்த ஸ்திரீகளில் சிலர், 'உங்களுக்குத் தெரியுமா, அவள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அங்கே அவள்... விவாகமாகாமல் குழந்தை பெற்றிருக்கும் ஸ்திரீ அவள் தான், அது தான் அவள்' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அந்த எல்லா அவப்பெயருடனும் அவள் நிற்க வேண்டியிருந்தது. ஜனங்கள் அவளிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர். 40.ஜனங்கள் இன்று பரிசுத்த ஆவியிடமிருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய சபையிடமிருந்தும் விலகியிருக்க முயற்சி செய்வதை அது எனக்கு நினைப்பூட்டுகிறது: 'அவர்களைப் பாருங்கள். அவர்கள் பரிசுத்த உருளையர்களாய் இருக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.' அதெல்லாம் சரிதான், அந்தக் குழந்தை யாருடையது என்று மரியாள் அறிந்திருந்தாள். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கூட தான் எதைச் சேர்ந்தவன் என்பதை அறிந்திருக்கிறான். அது மதவெறித்தனம் என்று உலகமானது எவ்வளவாக கூறினாலும் கவலையில்லை, ஒவ்வொரு விசுவாசியும் தான் எங்கே நிற்கிறான் என்பதை தன்னுடைய இருதயத்தில் அறிந்திருக்கிறான். நீங்கள் விரும்புகிற எதுவாகவும் அவனை நீங்கள் அழைக்கக் கூடும், அது அவனை தொல்லைப்படுத்துவதில்லை. அவன் தேவனுடைய இராஜ்ஜியத் தில் எங்கே நிற்கிறான் என்பதை அறிவான். 41.இப்பொழுது, அவர்கள் விலகியிருந்து கொண்டு, 'அதைப் பாருங்கள், அங்கே அவள் இருக்கிறாள்' என்று கூறு வதை என்னால் காண முடிகிறது. ஆனால் அவளோ ஒருபோதும் அதைக் கவனிக்கவேயில்லை, அவள் தொடர்ந்து அந்தச் சிறிய குழந்தையை கொஞ்சிக் கொண்டு, போய்க் கொண்டேயிருந்தாள். அந்த ஸ்திரீகள் தங்களுடைய அருமையான தையல் வேலைபாடுடைய ஆடைகளால் தங்களுடைய சிறிய குழந்தைகளை பொதிந்து கொண்டு சென்றனர். மகிமையின் இராஜாவோ சரீரத்தைப் போர்த்த உதவும் கதகதப்பான துணியால் போர்த்தப்பட்டிருந்தார். காளையின் நுகத்தடியிலிருந்து தான் அவர்கள் அதை எடுக்கிறார்கள். நான் சொன்னேன், அதைக் கொண்டு அந்த குழந்தையைப் போர்த்தியிருந்தாள். அவர்கள் மிகவும் ஏழையாக இருந்தனர், எதுவுமேயில்லை... குழந்தை பிறந்த போது, அக்குழந்தைக்காக அவர்களிடம் எதுவும் இல்லாதிருந்தது. இன்னுமாக சகலத்தையும் சிருஷ்டித்தவர் தன்மேல் அணிந்து கொள்ள ஒரு மேலாடை கூட இல்லாமல் அந்தக் காலை வேளையில் அந்த ஸ்திரீயினுடைய கரங்களில் படுத்திருந்தார். 42.ஓ, என்னே, அப்படியானால் நாம் யார்? இங்கே இந்த உலகத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்? பரலோக இரட்சகர் இறங்கி வந்து, ஒரு மாட்டுத் தொழுவத்தில் (சகோதரன் பிரன்ஹாம் மாட்டுத் தொழுவம் manger என்பதற்குப் பதிலாக, மேலாளர் manager என்று கூறி விடுகிறார் - தமிழாக்கியோன்.) பிறந்து, ஒரு தொழுவத்தின் வாசல் வழியாக வந்து, மரண தண்டனை வழியாக வெளியே போயிருக்கும் போது, நாம் முறையிடுகிறோம். என்னே, நாம் நம்மைக் குறித்தே வெட்கப்பட வேண்டும். 43.அதன் பிறகு, அவன் அங்கே நின்று கொண்டிருப் பதை நான் காண்கையில், இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் கட்டிடத்திற்குள் இருக்கிறார். என்னே, பரிசுத்த ஆவியானவர் சிமியோனை தட்டுவதை என்னால் காண முடிகிறது. இரட்சகர் அந்தக் கட்டிடத்திற்குள் இருந்து, சிமியோன் மரிக்கும் முன்பாக அவன் அவரைக் காண்பான் என்று பரிசுத்த ஆவியானவர் அவனிடம் வாக்குத்தத்தம் பண்ணியிருப்பாரானால், சிமியோனை இயேசுவுடன் தொடர்பு கொள்ளச் செய்வது பரிசுத்த ஆவியான வருடைய பொறுப்பு. அது சரியே. அவர் அவனுக்கு வாக்குப் பண்ணியிருந்தார். அது சரியே. எனவே, சிமியோன் புஸ்தகச் சுருளை வாசித்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அவன் நேரடியாக, 'நல்லது, அது யாராக இருக்கும் என்று வியப்பாக உள்ளதே, அது எப்போது இருக்கும்?' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 44.ஏறக்குறைய அந்த சமயத்தில், பரிசுத்த ஆவியானவர், 'சிமியோனே, உன் காலூன்றி நில்' என்றார். தேவனுடைய மனுஷர்களோ அல்லது தேவனுடைய பிள்ளைகளோ தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுவதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர்கள் நிச்சயமாகவே தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படு கின்றனர். அவர்கள் இன்னும் வழிநடத்தப்படுகின்றனர். அவர், 'சிமியோனே, எழுந்து, நடந்து செல்லத் தொடங்கு' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 'கர்த்தாவே, நான் எங்கே போக வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?' 'சிமியோனே, இப்பொழுது அது உனக்குத் (தேவை) யில்லை, நீ அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிரு.' அது தான் வழி, கீழ்படிதலே சிறந்தது. 45.அந்த வயதான பரிசுத்தவான் தன்னுடைய கன்னங்களில் கண்ணீர் துளித்துளியாக விழுந்து கொண்டிருக்க, தான் எங்கே போகிறோம் என்பதை அறியாமலேயே அவன் வருவதை என்னால் காண முடிகிறது. அவன் இங்கே ஜனங்கள் மத்தியில் நடந்து வருகிறான். அவன் எங்கே போய்க் கொண்டிருக்கிறான் என்பதையே அவன் அறியவில்லை. அவன் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறான். அவனுடைய இருதயத்தில் ஏதோவொன்று விடாமல் உந்தித்தள்ளிக் கொண்டிருக்க, 'என்ன சம்பவிக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஏதோ வொன்று சம்பவிக்கத் தயாராக உள்ளது.' அவன் அக்கட்டிடத்தினூடாக கீழே சென்று, அந்த ஸ்திரீகளெல்லாரும் இருக்கும் இடத்திலிருந்த அந்த வரிசையின் பக்கமாக போய், அவன் சரியாக அந்தச் சிறிய பெண்ணின் முன்னால் நின்றான், அது மிகவும் வெட்கக்கேடாக இருந்தது; அந்த குழந்தையை அவளுடைய கரங்களிலிருந்து எடுத்து, தன்னுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அவன், 'கர்த்தாவே, உமது சித்தத்தின்படி-உமது வார்த்தையின்படி உமது அடியேன் இப்பொழுது சமாதானத்தோடே போகட்டும்: உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது' என்றான். அவனுக்கு அது எப்படி தெரியும்? அவர் அதை வாக்குப்பண்ணினார். அவன் அதைக் காண்பான் என்று விசுவாசித்துக் கொண்டிருந்தான். அது சரியே. 46.ஒரு மூலையில் அன்னாள் என்னும் பெயருடைய குருடாயிருந்த வயதான ஒரு ஸ்திரீ இருந்தாள், அவள் ஒரு தீர்க்கதரிசியாகவும் ஆவியால் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவள் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந் தாள். பரிசுத்த ஆவியானவர் அவளைத் தட்டினார், அந்த வயதான குருடாயிருந்த தீர்க்கதரிசி இங்கே வருகிறாள், அவள் ஜனங்களினூடாக வந்து, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ஜனங்கள் மத்தியில் நகர்ந்து வந்தாள். அவள் சரியாக நேராக அந்த குழந்தை இருந்த இடத்திற்கு வந்து, தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, தேவனை ஸ்தோத்தரித்தாள். பரிசுத்த ஆவியானவர் அவரிடமாக ஒரு குருடான ஸ்திரீயை வழிநடத்தினார். என்னே! தேவனுடைய குமாரர்களும் குமாரத்தி களும் இன்னுமாக தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகின்றனர். அது சரியே. 47.இன்றிரவு இங்கே வியாதியாயுள்ள ஜனங்களாகிய நீங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசியுங்கள். நீங்கள் விசுவா சிப்பீர்களா? நல்லது, இன்றிரவு இங்கே உங்களை வழிநடத்திக் கொண்டு வந்தது எது? ஏனெனில் தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தார், விருப்பமுள்ளவன் வரக்கடவன் என்று இலவசமாக திறக்கப்பட்டுள்ள ஒரு நீரூற்று இருக்கும் இடமாகிய இங்கே பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்தியிருக்கிறார். சிமியோனை வழிநடத்தின அதே பரிசுத்த ஆவியானவர் உங்க ளையும் வழிநடத்தினார், ஏனெனில் அவர் தம்முடைய வார்த்தையில் அதை ஒரு வாக்குத்தத்தமாகக் கொடுத்திருக்கிறார். ஆமென். நாம் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறோம். 48.தேவன் தம்முடைய வரங்களை கடைசி நாட்களில் ஊற்றுவதாக இங்கே வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். அவர் தம்முடைய சபையை மீண்டும் அருமையான குணாதிசயமுள்ள சபையாக திரும்ப அளிப்பார். அவர் அல்பாவும் ஒமேகாவுமாகவும், வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பானவராகவும், முதலும் கடைசியுமானவராகவும், இருந்தவரும் இருப்பவரும் வருகிறவருமாகவும், தாவீதின் வேரும் சந்ததியுமாகவும், அதிகாலை விடிவெள்ளியாகவும், ஷாரோனின் ரோஜாவாகவும், பள்ளத்தாக்கின் லீலியாகவும் நின்று கொண்டிருப்பதை அவர்கள் காணும் போது: அவர் அப்பொழுது இருந்த விதமாக அவர்கள் அவரைக் கண்ட போது, இந்த நாளில் அவர்கள் அவருக்காகக் காத்துக் கொண்டிருக் கின்றனர். 'சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்' என்று தீர்க்கதரிசி கூறினான். 49.சுவிசேஷமானது முதலாவது யூதர்களுக்கு கொண்டு வரப்பட்ட கிழக்கத்திய நாடுகளில் - இது ஒரு கிழக்கத்திய புஸ்தகமாகும். கிழக்கத்திய ஜனங்கள் மேல் பரிசுத்த ஆவி விழுந்தது, இப்பொழுது பகலாகவோ இரவாகவோ இல்லாத ஒரு நாள் இருக்குமென்று அவர் சொன்னார். நாம் அந்த நேரத்தில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அதனூடாக ஜீவித்து வந்திருக்கிறோம். அது சரியே. இது இருளில்லாத ஒரு நாளாகும், ஜனங்கள் இரட்சிப்பில் விசுவாசம் கொண்டுள்ளனர், அவர்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் இந்த நாட்களெல்லாம், தேவனுடைய மகத்தான சகல வெளிச்சமும் ஒரு மூடுபனி வழியாக மறைக்கப்பட்டிருக்கிறது. 50.மேலும் இப்பொழுது, அது இங்கேயிருக்கும் மேற் கத்திய ஜனங்களை அடையும் மட்டாக குமாரன் பிரயாணம் செய் துள்ளார். மேலும் அவர், 'சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்' என்றார். மேகங்கள் பின்னால் தள்ளப்பட்டு விட்டன. கிழக்கத்திய தேசங்களில் ஆதியில் விழுந்த அதே பரிசுத்த ஆவி தான், மேற்கு துருவத்திலும் இன்று புறஜாதிகளின் மேல் விழுந்து கொண்டிருக்கிறது, அவர்களுக்கு அதே பரிசுத்த ஆவி அதே அடையாளங்களுடனும், அதே அற்புதங்களுடனும் மற்றும் ஒவ்வொன்றுடனும் இந்தக் கடைசி நாளில் அருளப்படுகிறது, அவர் செய்தது போன்று அதே விதமாக. தீர்க்கதரிசி, 'சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்' என்று சொன்னான். 51.கட்டுக்கதை, மற்றும் இங்கேயுள்ள இந்த எல்லா சபை செயல்பாடுகள், சபையை, சபையை, சபையை, என்னுடைய சபையை, உன்னுடைய சபையை, இந்த சபையை சேர்ந்து கொள்ளுதலாகிய மேகங்கள்: அவர்களுடைய நாட்கள் மங்கிப் போகின்றன, தேவன் ஜனங்கள் மேல் பரிசுத்த ஆவியைப் பொழிந்து, இந்த சாயங்கால நேரத்தில் வெளிச்சத்தைக் கொடுக் கிறார். மேலும்... அது அஸ்தமிக்கிறது. ஜனங்கள் அனுதினமும் அணிவகுத்துக் கொண்டு இராஜ்ஜியத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். 52.ஓ, சிமியோனுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த அதே பரிசுத்த ஆவியானவர், சுகமளித்தலுக்கான வாக்குத்தத்தம் கொடுத்து, இன்றிரவும் நீரூற்றண்டை உங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இந்த முழு கட்டிடமும் ஒரு நீரூற்றாயிருக்கிறது, இங்கே பரிசுத்த ஆவியானவர் திறந்த இருதயத்துடன் இங்கேயுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபர் மேலும் சரியாக இப்பொழுதே இறங்கி வந்து கொண்டிருக்கிறார், அவர் சரியாக இப்பொழுதே விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே ஒவ்வொருவரையும் சுகமாக்கக் கூடும். நீங்கள் செய்ய வேண்டு மென்று தேவன் கேட்பதெல்லாம் அது மாத்திரமே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாம் ஜெபிக்கலாம். 53.பிதாவே, உம்முடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், இந்த மகத்தான வெளிச்சமானது... இன்னும், சடங்காசாரமாகிய மேகங்கள் தூர விலகி, பரிசுத்த ஆவியானவர் அதே விதமான ஒரு வெளிச்ச மாக, கடந்த சில வருடங்களாக இந்த ஜக்கிய நாடுகளிலும், இந்த மேற்கத்திய உலகத்தின் மற்ற பாகங்களிலும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இப்பொழுது, மீண்டும் கிழக்குத் திசையுடன் ஒன்று சேருவதற்காக அவர்கள் அதே செய்தியை திரும்பவும் ஏற்றுக் கொள்கின்றனர். ஓ கர்த்தாவே, குமாரன் ஒவ்வொரு ஆத்துமாவிலும் பிரகாசிக்கட்டும். நாங்கள் ஜீவித்துக் கொண்டிருந்த இந்த எல்லா ஸ்தாபன நாட்களிலும் மந்தாரமாகவும், உள்ளேயும் வெளியேயுமாகவும், மேலும் கீழுமாகவும், இஸம்களாகவும், அதைப்போன்ற மற்றவைகளாகவும் இருந்திருக் கின்றன என்று ஒவ்வொரு நபரும் தெளிவாகப் புரிந்து கொள்ளட்டும், ஆனால், 'சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்' என்று தீர்க்கதரிசி கூறினான். 54.இப்பொழுது, நீர் இன்றிரவு மிகவும் அதிகமாய் செய்ய வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, உம்முடைய மகத்தான வல்லமையை ஊற்றும். உம்மு டைய உயிர்த்தெழுதலை எங்களுக்குக் காண்பித்து, இங்கேயுள்ள ஜனங்களை இன்றிரவு ஆசீர்வதியும். ஆராதனையிலிருந்து மகிமையைப் பெற்றுக் கொள்ளும். உம்முடைய ஊழியக்காரனை மறைத்து, பேசுகிறவரின் உதடுகளையும், கேட்கிறவரின் காது களையும் விருத்தசேதனம் பண்ணும், ஒவ்வொரு இருதயமும் நிரப்பப்படுவதாக. 55.நாங்கள் இன்றிரவு இங்கிருந்து கடந்து செல்லும் போது, எம்மாவூரிலிருந்த அவர்களைப் போல, 'நம்முடைய கர்த்தர் செய்த அசாதாரணமான கிரியைகளினிமித்தம், நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா' என்று நாங்கள் கூறுவோமாக. அவருடைய நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 56.நான் ஏன் இவ்விதமாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் அப்படியே... நான் - நான் வெறுமனே அதை விரும்புகிறேன். மேலும் அது... இங்கேயுள்ள ஆவியால் நிறைந்த இந்த ஒரு கூட்டம் ஊழியக்காரர்களுடன் உட்கார்ந்து கொண்டு, அவ்விதமாக உட்கார்ந்து கொண்டிருக்க, நான் அதன் மத்தியில் நின்று கொண் டிருக்கிறேன். ம், என்ன சம்பவிக்கக் கூடும்? எதுவும் சம்பவிக் கக்கூடும். நண்பர்களே, தேவையான எல்லாமும் இங்கேயுள்ளது. நான் செய்யக்கூடிய ஒரு காரியம் இருக்குமானால். நான் - நான் பெரிய அளவான பேச்சாளன் அல்ல; பேச்சாளர்கள் இங்கே மேடையில் இருக்கின்றனர். நான் ஒரு - ஒரு வரத்தைக் கொண்டவனாய் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்காக இங்கேயிருக்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது இந்த ஊழியமானது வார்த்தையை மிகவும் தெள்ளத்தெளிவாக போதிப்பதை கண்டு, தேவன் கீழிறங்கி வந்து அந்த வார்த்தையை உறுதிபடுத்துவதை நீங்கள் காணும்போது, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? 57.அப்படியானால் அசையாத உறுதியான விசுவாசத்தோடு எழுந்து, 'ஆம், கர்த்தாவே, என்னுடைய விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது. நான் உம்மை விசுவாசிக் கிறேன். கர்த்தாவே, நான் உம்முடன் தரித்திருப்பேன். நீர் என்னு டைய கப்பலின் கப்பலோட்டியாக (Pilot) இருக்கிறீர்; கர்த்தாவே, என்னை அதனூடாகக் கொண்டு செல்லும். உம்மோடு அதனூடாகப் போவதற்காக நான் வந்திருக்கிறேன். விலைக்கிரயம் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, விலை என்னவாயிருந்தாலும், தூரம் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, நான் உம்மோடு கடலில் இந்தக் கப்பலில் பிரயாணம் செய்வேன்' என்று கூறும் நேரம் இதுவாகும். இயேசுவின் நாமத்தின் வழியாக தேவன் அதை இன்றிரவு அருளுகிறார். 58.இப்பொழுது, இது பெரும்பாலும் இந்த அரங்கத்தை மூடுவதற்கான நேரம் என்று ஊகிக்கிறேன். நாம் பேசுவதற்கு மிகவும் அதிக நேரம் எடுத்துக் கொண்டோம். ஆனால், ஓ, எனக்குத் தெரியவில்லை, நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நாம் அதைச் செய்வதற்கு அதுதான் காரணமாகும். 59.பில்லி பால் எங்கே? எந்த (ஜெப) அட்டைகள்... அவர்கள் ஏதாவது (ஜெப) அட்டை கொடுத்தனரா? ஓ, ஐம்பது முதல் நூறு வரை. சரி, அப்படியானால், அதிலிருந்து 75 முதல் தொடங்கலாம். ஓ, 75. யார் ஓ, 75 அட்டையைப் பெற்றிருக்கி றீர்கள்? சரி, 76? நூறு வரை வாருங்கள்; இருபத்தைந்துடன் தொடங்க வேண்டுமென்று எங்களிடம் கொடுத்துள்ளனர். (ஏறக்குறைய அநேகர் என்று நம்புகிறேன்... அந்த அநேகமானவர்களை நம்மால் எழுந்து நிற்கப் பண்ணக் கூடுமா? முதலாவது ஏறக்குறைய 15 பேரை எழுந்து நிற்கப் பண்ணலாம், அல்லது அதைக் குறித்து என்ன?) 60.சரி. ஒரு... ஓ, 75 முதல் 90 வரை. அப்படியானால் நாம் அங்கிருந்து அழைப்போம். சரி. அப்போது எவ்வளவு அதிகமான பேரை நாம் உள்ளே பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் பார்ப்போம். நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எழுந்து நிற்க இயலாதவர்கள் இருந்தால், ஒரு உதவிக்காரரை சற்று அழை யுங்கள், நீங்கள் விரும்பினால், அவர்கள்-அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். 61.சரி, இசைப்பேழை வாசிப்பவர் அந்த அருமையான பாடலாகிய விசுவாசிப்பாய் என்ற பாடலை மீண்டும் நமக்கு கொடுப்பார்களானால், நான் அதை மிகவும் பாராட்டுவேன். நாம் எல்லாவிதமாகவும் ஒன்றாக அதைப் பாடுவோம், அதை தாழ்ந்த குரலில் பாடவோ அல்லது ஏதோவொரு வழியில் விசுவாசிப்பாய் பாடலைப் பாடுவோம். சரி. (இங்கே பாடலை வழிநடத்துபவர் யார்?) ... விசுவாசிப்பாய், விசுவாசிப்பாய், எல்லாம் கைகூடும், விசுவாசிப்பாய்; விசுவாசிப்பாய், விசுவாசிப்பாய், எல்லாம் கைகூடும், விசு... (எழுபத்தைந்து முதல் நூறு வரை.) கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் இவ்விதமாகப் பார்க்கும்படி நான் விரும்புகிறேன், நீங்கள் விரும்பினால், உங்களுடைய பகுக்கப்படாத கவனத்தை சிறிது நேரம் எனக்குக் கொடுங்கள். 62.நாம் இன்றிரவு கற்பனை செய்து பார்ப்போம், இப்பொழுது... நாளை வருமானால், உங்களுடைய நாளைய தினத்திற்கான செயல்பாடுகளை நீங்கள் கொண்டிருப்பீர்கள் என்று நமக்குத் தெரியும். நாளைய தினம் வரவில்லையென்றால், நாம் ஒன்றாக மகிமையில் இருப்போம், எனவே அது அதை முடிக்கிறது. நாம் அப்படியே இன்றிரவு கூறுவோம், நல்லது, நாம் இந்த அழகான ஸ்ரீநர் அரங்கத்தை இன்றிரவும் நாளை இரவும் பெற்றிருக்கிறோம். 63.நாம் சுகமாகப்போகும் இரவு இன்றிரவே என்று நாம் கூறுவோம்: 'கர்த்தாவே, இன்றிரவு நான் - நான் என்னுடைய - என்னுடைய எல்லா அவிசுவாசத்தின் நிழல்களையும் அப்படியே தூர அகற்றி விடுகிறேன். நான் இனிமேல் அவிசுவாசம் கொள்ளப் போவதில்லை. நான் இன்றிரவு என்னைத்தானே தனியே பிரித்து, மேல்நோக்கிப் பார்க்கப் போகிறேன். என்னைச் சுற்றிலும் யார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்கப் போவதில்லை. நான் மேலே நோக்கிப் பார்க்கப் போகிறேன். கர்த்தராகிய இயேசுவே, நான் உமக்காக எதிர்நோக்கியிருக்கப் போகிறேன். நீர் வந்து நீர் செய்யப்போவதாக சொல்லியவற்றை செய்யப்போகிறீர் என்று நான் உம்மை விசுவா சிக்கப் போகிறேன். இப்பொழுது, கர்த்தாவே, நான் எதை எதிர் நோக்கியிருக்கப் போகிறேன்? நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்றும் நீர் என்றென்றுமாக ஜீவிக்கிறீர் என்றும் நீர் சொன்னீர்.' அது வேதவாக்கியம் தானா? என்றென்றுமாக ஜீவித்தல், மரிக்காமல் என்றென்றுமாக ஜீவித்தல். 'நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறீர் என்று வேதவாக்கியம் போதிக்கிறது. இப்பொழுது, பிதாவே, நீர் செய்கிற காரியங்களை உமது சபையும் செய்யும் என்று நீர் உம்முடைய சபைக்கு வாக்குத்தத்தம் பண்ணியுள்ளீர் என்று நான் உணருகிறேன். இப்பொழுது, வேதாகமத்தில் வாசித்த பிரகாரமாக, நீர் இங்கே பூமியில் இருந்த போது, என்ன செய்தீர்? நல்லது, நீர் ஒரு மகத்தான மனிதர் என்று உரிமைகோரவில்லை.' 64.ஆனால் அவரைக் குறித்து குறிப்பிடத்தக்க ஒரு காரியம் உண்டு: அவர், 'பிதாவானவர் எனக்குக் காண்பிக்கிற வைகள் எவைகளோ அவைகளை மாத்திரமே நான் செய்கிறேன்: நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன், என்ன செய்ய வேண்டு மென்று பிதாவானவர் எனக்குக் காண்பிக்கிறார், அதன்பிறகு நான் அதைச் செய்கிறேன்' என்றார். 65.ஒரு ஸ்திரீ அவரிடம் வந்தாள், அவளுக்கு ஒரு வகையான கெட்ட பெயர் இருந்தது. அவர் முதலில் ஒருவேளை அதை அறியாமல் இருந்திருக்கலாம். அவளிடம் பேசும்படியாக அவர் சென்றார், அவர் அவளிடம் சிறிது நேரம் பேசிய பிறகு, அவர், 'நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அவள், 'எனக்கு புருஷனில்லை' என்றாள். அவள்... அவர், 'இல்லை, உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்' என்றார். அது அவளை ஆச்சரியமடையச் செய்தது. அவள், 'நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வருகிறார் என்பதை நாங்கள் அறிவோம்' என்றாள். அவர், 'நானே அவர்' என்றார். எனவே, அவள் பட்டணத்திற்குள் ஓடி, சம்பவித்தவைகளைக் கூறத் தொடங்கினாள். அது அந்தப் பட்டணம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக் காரணமாகியது. பிலிப்பு அங்கு போய், ஒரு மகத்தான எழுப்புதலைக் கொண்டிருந்தான், ஏனெனில் இயேசு அவ்வழியாக கடந்து சென்றார். அவர் இவ்வழியாகக் கடந்து செல்லும்படி நாம் அனு மதித்தால், நாமும் ஒரு மகத்தான எழுப்புதலைக் கொண்டிருப்போம். 66.வேறொரு சமயம் நாம் காண்கிறோம்: யாரோ ஒருவர் வைத்திருந்த ஒரு - ஒரு மீனின் வாயில் நாணயம் இருந்ததை அவர் அறிந்து கொண்டார் என்று காண்கிறோம். இருவழியில் கட்டப்பட்டு, நின்று கொண்டிருந்த ஏதோவொரு கோவேறு கழுதை எங்கு நின்று கொண்டிருந்தது என்பதை அவர் அறிந்து கொண்டார். அது வேதவாக்கியம் தானா? 67.ஒரு சமயம் சீமோன் என்னும் பெயருடைய ஒரு மனிதன் அவரிடம் வந்தான். இயேசு அவனுடைய பெயரை அறிந்து கொண்டார். அவர், 'உன்னுடைய பெயர் சீமோன், ஆனால் இதுமுதற்கொண்டு நீ பேதுரு என்று அழைக்கப் படுவாய்' என்றார். 68.பிலிப்பு அவரிடம் வந்தான், அவன் சென்று நாத்தான் வேலைக் கண்டு, நாத்தான்வேல் வருகிறான். அவர், 'நீ ஒரு நல்ல மனிதன், உண்மையும் நேர்மையுமான மனிதன். இதோ கபடற்ற இஸ்ரவேலன்' என்றார். அவன், 'ரபி, நீர் என்னை எப்போது அறிந்தீர்?' என்று கேட்டான். அவர், 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போதே உன்னை அறிந்தேன்' என்றார். உ-ஊ. அவன், 'நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் இராஜா' என்றான். 69.ஆனால் இன்றோ குளிர்ந்து போனதும், மெத்தனம் கொண்ட ஒரு உலகமாகவும் உள்ளது, தேசத்தின் ஊழியக் காரர்கள் அந்த காரியங்களுக்கு விரோதமாக ஜனங்களுக்குப் போதித்திருக்கின்றனர். இன்று, அவர்கள், 'இது மனதோடு தொடர்பு கொள்ளுதல், அது பிசாசு' என்று கூறுகின்றனர். நல்லது, அவர்கள் அந்நாளிலும் அதே காரியத்தையே செய்தனர். இயேசு எல்லா குறி சொல்பவர்களிலும் முதன்மையானவர் என்றும் அவர் 'பெயல்செபூல்' என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அவரோ மாறுவேடத்தில் தேவனுடைய குமாரனாக இருந்தார், அவர்களோ அவரை அறியவில்லை. அவர்கள் தங்களுடைய கண்களைத் திறந்திருந்தனர்... 70.அவர், 'உங்களுக்கு கண்களிருந்தும் காண முடிய வில்லை; காதுகளிருந்தும் கேட்க முடியவில்லை. ஏசாயா அதைக் குறித்து உரைத்துள்ளான், அந்தக் காரியங்கள் இருக்கும் என்றும் அது அவ்விதமாகவே இருக்கும் என்றும் அவன் கூறினான்' என்றார். 71.இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால், நான் இன் றிரவு உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கப் போகிறேன். நீங்கள் பயபக்தியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மேலும் இப்பொழுது, சகோதரர்கள் என்னைக் கவனிப்பார்கள், பாருங்கள்... (நீங்கள் எல்லாரும்... இருப... அந்த... நாம் எவ்வளவு ஜனங்களை அழைக்கிறோம்? பதினைந்து. சரி. இன்னும் கூடுதலான ஜனங்களுக்கு இடமுள்ளதா? அங்கே இடமுள்ளதா? என்ன சொல்லுகிறீர்கள்? சரி.) 72.சரி. இப்பொழுது, கிறிஸ்தவ நண்பனே, நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்: அங்கேயுள்ள நடைபாதையிலும், எங்காவது எங்காவது ஜெப அட்டை இல் லாமல் இருந்து, நீங்கள் ஜெப அட்டையைப் பெற்றிராத கார ணத்தால் இங்கே இந்த இடத்திற்கு வர முடியாமலும் இருக்கிற வியாதியாயுள்ள எத்தனை பேர் இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி, 'இன்றிரவு தேவன் என்னை சுகமாக்கும்படி வாஞ்சிக்கிறேன்' என்று கூறுங்கள். இக்கட்டிடத்தில் எங்காவது இருக்கிறீர்களா? நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, சற்று உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. இப்பொழுது, நீங்கள் இந்த வழியாக நோக்கிப்பார்த்து, விசுவாசத்தோடு ஜெபியுங்கள். 73.இப்பொழுது, அதை விளக்கிக்கூற முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு அவரைக் கவனித்துக் கொண்டிருந்த கூட்டத்தாரை நோக்கிப் பார்த்து கொண்டிருந்தார், பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயிடம், 'உன் விசுவாசம் உன்னை சுகப்படுத்தினது' என்று கூறினார். கூட்டத் தினரின் எதிரில் நின்று கொண்டிருந்த ஒரு குருடனிடம், 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்று அவர் கூறினார். பாருங்கள். அவர் சுற்றிலும் திரும்பி கூட்டத்தினரை நோக்கிப் பார்த்து, அவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொண்டார். அது சரியா? அவர்களுடைய எண்ணங்களை, அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தவைகளைக் குறித்து அவர் அறிந்து கொண்டார். இப்பொழுது, நீங்கள் ஜெபிக்கத் தொடங்குங்கள், இப்பொழுது கர்த்தராகிய இயேசு வந்து எனக்கு ஒத்தாசை புரிவாராக. கர்த்தாவே, அதை அருளும், உம்முடைய மகிமைக்காகக் கேட்கிறேன், கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 74.இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக் கிறார். இப்பொழுது, சகோதரர்களே, நீங்கள் எனக்குப் பின்புறத் தில் இருக்கிறீர்கள், ஆவிகள் இரு வழிகளிலிருந்தும் வரும் போது, நிச்சயமாகவே இது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, இப்பொழுது, எல்லாவிடத்திலும் எனக்காக ஜெபத்தில் இருங்கள். நான் இங்கே குற்றம் கண்டுபிடிக்கிறவர்களின் முன்பாக நின்று கொண்டிருக்கிறேன் என்பது தெளிவாகப் புரிகிறதா? நீங்கள்... இந்த அபிஷேகமானது வல்லமையுடன் வரும் போது, உடனே அதை உங்களால் உணர முடியும், பிரகாசமான ஒளி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்து கொண்டிருக்கும், நீங்கள் பாருங்கள். அது ஒருவகையாக கடினமாக உள்ளது, ஆனால் நீங்கள் இப்பொழுது ஜெபியுங்கள்; விசுவாச சுவரைக் கட்டுங்கள். 75.சரி, சகோதரனே, அந்த சீமாட்டியைக் கொண்டு வாருங்கள். வியாதியஸ்தர்கள் வரிசையில் வந்து கொண்டிருக் கின்றனர், அங்கே வரிசையிலோ அல்லது கட்டிடத்தில் எங்காவது இருக்கும் நீங்கள், நீங்கள் விசுவாசிக்காவிட்டால் இந்த ஜெப வரிசையில் ஒருபோதும் வர வேண்டாம். ஏனெனில் எப்போதும் இருந்ததை விட நீங்கள் மோசமடைவீர்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். வேதாகமம், 'போ, ...' என்று கூறுகிறது. இனி மேல் என்ன? (சபையார், 'பாவம்' என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) பாவம் என்பது என்ன? 'அவிசுவாசம்.' 'போ, இனிமேல் அவிசுவாசம் கொள்ளாதே, அல்லது ஒரு மோசமான காரியம் உன்மேல் வரும்.' பாருங்கள். எனவே நீங்கள் கட்டாயம் அவிசுவாசம் கொள்ள வேண்டாம். 76.இப்பொழுது, பொய் பேசுதல், திருடுதல், மது அருந்து தல், சூதாடுதல்: அது பாவமல்ல, அது பாவத்தின் தன்மைக ளாகும். நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கும் காரணத்தால் தான் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அப்படிப் பட்ட காரியங்களைச் செய்ய மாட்டீர்கள். பாருங்கள், அது தன்மையாக இருக்கிறது. 77.எனக்குத் தெரிந்தவரை, அந்த ஜனங்கள் எனக்கு அந்நியர்களாக உள்ளனர். என்னுடைய வீடு இந்தியானாவில் உள்ளது. நான் அறிந்துள்ளவரை இந்த ஜனங்கள் முற்றிலும் அந்நியர்களாயுள்ளனர். கூட்டத்தினரில் எனக்குத் தெரிந்த யாருமே இச்சமயத்தில் இக்கட்டிடத்தில் இல்லை; நான் அடையாளம் கண்டுகொள்கிற மிகச்சிலரே மேடையில் உள்ளனர். சகோதரன் பிரௌன், சகோதரன் மூர், மற்றும் இச்சகோதரர்களில் சிலர் இங்கே உட்கார்ந்திருக்கின்றனர். அது உண்மையென்று எனக்கு முன்பாக நிற்கிற சர்வ வல்லமையுள்ள தேவன் அறிவார், ஆனால் அவர் உங்கள் ஒவ்வொருவரையும் அறிவார். ஜெபியுங்கள், விசுவாசம் கொள்ளுங்கள். 78.நான் இந்த ஸ்திரீயிடம் கொஞ்சம் பேச விரும்பு கிறேன், பரிசுத்த ஆவியானவர் இக்கூட்டத்தில் கொண்டிருக்கும் சரியான வழியை உடைய ஒழுங்கில் பேச விரும்புகிறேன். இப்பொழுது, என்னுடைய சகோதரியே, முதலாவது காரியமாக நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இப்பொ ழுது, ஒருவேளை கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த இந்த சூட்டை அணிந்து கொண்டு இங்கே நின்றிருந்தால் என்னவாக இருக்கும்? இப்பொழுது, நீங்கள், 'நல்லது, நான் வியாதியா யிருக்கிறேன். எனக்கு சுகம் தேவைப்படுகிறது' என்று கூறுவீர் களானால். 79.நல்லது... அவர், 'நான் அதை உனக்காக 1900 வருடங்களுக்கு முன்பே செய்து விட்டேன். நீ அதை விசுவாசிக் கமாட்டாயா?' என்று சொல்வார். பாருங்கள்? அவரால் உங் களை சுகமாக்க முடியாது, ஏனெனில் அவர் ஏற்கனவே அதை செய்து விட்டார். நீங்கள், 'நான் ஒரு பாவி. எனக்கு இரட்சிப்பு தேவைப்படுகிறது' என்று கூறுவீர்களானால். அவரால் இப்பொ ழுது உங்களை இரட்சிக்க முடியாது, அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்போது அது உங்களுடையதாகும். பாருங்கள். 80.இப்பொழுது, பாருங்கள், விசுவாசம் வார்த்தையைக் கேட்பதினால் வருமானால், தேவன் சபையில் வித்தியாசமான வரங்களை வைத்துள்ளார், சபையை ஒழுங்கில் வைத்துள்ளார். அது சரியல்லவா? 81.இப்பொழுது, நான் ஒரு நோக்கத்திற்காக உங்க ளோடு பேசிக் கொண்டிருக்கிறேன், நிச்சயமாக. சரி. இயேசு கிறிஸ்து கிணற்றண்டை இருந்த ஸ்திரீயிடம் பேசினதும் அதே நோக்கத்துக்காகத் தான், பாருங்கள்: உங்களுடைய ஆவியோடும் ஆத்துமாவோடும் தொடர்பு கொள்கிறேன். அது சரியே. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென்றும், அவர் செய்ய வேண்டுமென்று நாம் அவரிடம் கேட்டவற்றை செய்யும்படியாக இயேசு கிறிஸ்து இங்கேயிருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் அறியும்படி தேவன் அனுமதிப்பாரானால், நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், உன்னுடைய கோளாறு என்னவென்று நான் அறியும்படி தேவன் அனுமதிப்பா ரானால், அதன்பிறகு எதுவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதை விசுவாசிப்பீர்களா? 82.நாம் அந்நியர்களாக இருந்தால், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், எனவே... நாம் நம்முடைய - நம்முடைய ஜீவியத்தில் ஒருவருக்கொருவர் ஒருபோதும் கண்டதில்லை அல்லவா? இது... அல்லது - அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டதேயில்லை, அறவே கிடையாது, வெறுமனே இங்கே நின்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது, தேவன் உங்க ளுக்கு உதவி செய்யப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? 83.இப்பொழுது, நீங்கள் - நீங்கள் வேதனைப்படுகி றீர்கள். அங்கே ஏதோவொன்றுள்ளது, யாரோ ஒருவர் பின்புறமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். உன்னுடைய தலையின் பின் பாகத்தில் நீ அதைப் பெற்றிருக்கிறாய். அது ஒரு - அது ஒரு - ஒரு கட்டியாகும். அந்தக் கட்டி மூக்கில் உள்ளது. அது சரியே, இல்லையா? இங்கே வாருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கோளாறு என்னவென்று நான் அறியும்படி செய்த அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அது இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சகோதரி, 'ஆம், நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) 84.அப்படியானால் பிதாவே, நான் செய்ய வேண்டு மென்று நீர் சொன்னதை நான் செய்திருக்கிறேன். நீர் என்னிடம் கூறின எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். நீர் செய்வீர் என்று என்னிடம் கூறினதை உறுதிபடுத்தியிருக்கிறீர். இப்பொழு தும், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சத்துரு இந்த சகோதரியை விட்டு விலக வேண்டுமென்று நான் கேட்கிறேன், அவனிடம் கேட்க மாத்திரம் செய்யவில்லை, அவன் போக வேண்டுமென்று கட்டளை கொடுக்கிறேன், ஏனெனில் இயேசு கிறிஸ்து அதிகாரம் கொடுத்துள்ளார்: இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா! இயேசுவின் நாமத்தில், ஆமென். சரி, சகோதரியே, களிகூர்ந்து கொண்டும், சந்தோ ஷத்தோடும் போங்கள், இப்பொழுதே சுகமடையுங்கள். சரி. 85.விசுவாசத்தோடு வாருங்கள். விசுவாசம் கொண்டவர் களாய் வாருங்கள். இப்பொழுதே நீ விசுவாசத்தைக் கொண் டிருக்க வேண்டும், அப்படியே உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தாக வேண்டும். அவர் இருக்கிறார் என்றும் அவர் தம்மை விடாமுயற்சியுடன் தேடுபவர்களுக்கு பலன் அளிக்கிறார் என்றும் விசுவாசித்தாக வேண்டும். இப்பொழுது, உங்களால் இயன்ற வரை பயபக்தியோடு இருங்கள். 86.இப்பொழுது, சீமாட்டியே, நீங்கள் சிறிது நேரம் இங்கே வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் வெறுமனே விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நீங்கள் ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் ஆவியால் நிரம்பின கிறிஸ்தவளாக இருப்பதை நான் காண்கிறேன். சரி. நான் அதை எவ்வாறு அறிந்தேன், உங்களுடைய ஆவியை உணர்ந்து கொண்ட காரணத்தால் தான், பாருங்கள், நீங்கள் அவ்வாறு தான் இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் ஏதோவொன்றிற்காக இங்கேயிருக்கிறீர்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் இக்காரியங்களை செய்யும்படி தேவன் என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது, உங்களுடனான காரியம் என்ன, உங்களுடைய சரீரத்தில் ஏதோவொன்று குறைவுபடுகிறது. அது எலும்பிற்கான கால்சியம். உங்களுக்கு ஒரு விபத்து நடந்தது. நீங்கள் விழுந்து உங்களுடைய கையை உடைத்துக் கொண்டீர்கள், அது சுகமடை யாது. அது சரியே. இப்பொழுது இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 87.பிதாவாகிய தேவனே, இயேசுவின் நாமத்தில், நான் அவர்களின் மேல் கரங்களை வைக்கும்போது, இந்த ஸ்திரீயி னுடைய சரீரத்தில் தேவைப்படுகின்ற தனிமங்கள் திரும்பவும் வரக்கடவது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகத்திற்காக வேண்டுகிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. களி கூர்ந்தபடியே செல்லுங்கள். 88.அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் கறுப் பின சீமாட்டி சைனஸ் கோளாறினாôல் அவதிப்படுகிறார்கள். சீமாட்டியே, இச்சமயத்தில் நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்களா? சரியாக அங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... ஆம், தேவன் சுகமளிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் காலூன்றி நில்லுங்கள். இங்கேயிருக்கும் கண்ணாடிகளை அணிந்துள்ள அந்த சீமாட்டியே, அப்படியே உங்கள் காலூன்றி நில்லுங்கள். அவர் அங்கேயே உங்களை சுகமாக்கினார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் வீட்டிற்குப் போகலாம். உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தது. இப்பொழுதே அது உங்களை விட்டுப் போய் விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் சுகமானீர்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்; தேவனால் கூடும் என்றும் அவர் செய்வார் என்றும் விசுவாசியுங்கள். சரி. 89.அந்த சீமாட்டியை கொண்டு வருவீர்களா? சகோ தரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நிச்சய மாக, பேசிக்கொண்டிருக்கிறது... வழக்கமாக அந்த நபரில் என்ன தவறுள்ளது என்று காண நான் முயற்சிக்கிறேன்; பரிசுத்த ஆவியானவர் எனக்கு காண்பித்த உடனே, அதைத் தெரிவிக்கி றேன், அதோடு அது போக விடுகிறேன்; ஆனால் நீங்கள் ஜனங்களோடு அதிகமாகப் பேசும் போது, அவர்களைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்கிறீர்கள். அது அப்படியே தொடர்ந்து... ஆனால் அச்சமயத்தில் ஒரு தரிசனத்தைப் பார்க்கும் போது, அது என்னை மிகவும் பலவீனப்படுத்துகிறது. 90.ஒரு ஸ்திரீ இங்கே ஊன்று கோல்களில் நின்று கொண்டிருக்கிறாள், நாம் நிச்சயமாகவே அவளிடம் என்ன கோளாறு உள்ளது என்று காண்கிறோம். அவள் ஊன்று கோல் களில் இருக்கிறாள், ஆனால் அதற்குப் பின்னால் வேறு ஏதோ வொன்று இருக்கலாம். எனக்குத் தெரியாது. அவள் ஏன் ஊன்று கோல்களில் இருக்கிறாள்? என்னால் உங்களிடம் கூற முடியாது. தேவன் அதை அறிவார், இல்லையா? இப்பொழுது, நீங்கள் பய பக்தியாயிருங்கள். நான் ஒருகணம் இந்த ஸ்திரீயோடு பேசட்டும். 91.சகோதரியே, (உன்னோடு) தொடர்பு கொள்வதற்காக நான் அவருடைய ஊழியக்காரனாக இந்த வார்த்தைகளை உன்னிடம் சற்று பேச விரும்புகிறேன். அங்கே ஏதோவொன்று ஏற்கனவே சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்து கொண்டுள்ளாய், ஏனெனில் அது - அது பரிசுத்த ஆவியாகும். விநோதமான ஏதோவொன்று அசைந்து கொண்டிருக்கிறது என்பதை நீ - நீ உணருகிறாய். அது சரியா? அது அவ்வாறு இருந்தால் உன் தலையை ஆட்டு. அது சரியே. பாருங்கள்? 92.அவர்கள் இங்கே கூட்டத்தில் வைத்திருக்கிற கர்த்தருடைய தூதனுடைய படத்தை நீ பார்த்திருக்கிறாயா? இது... இந்த சிறு காகிதங்களில் அவர்கள் அதை வைத்துள்ளனர். அவர்கள் இங்கே அவைகளை விற்கின்றனர் என்று நான் நம்புகிறேன், நீங்கள் பாருங்கள். அது மேடையில் இருக்க வேண்டும். ஆனால், எப்படியாயினும், அதை தான் நீ இப்பொழுது உணருகிறாய். 93.உனக்கும் எனக்கும் இடையே, அது பால் போல வெண்மையாக (milky) மாறிக் கொண்டேயிருக்கிறது. நாம் ஒரு வருக்கொருவர் முழுவதுமாக அந்நியராயிருக்கிறோம். நான் என்னுடைய ஜீவியத்தில் உன்னை ஒருபோதும் கண்டதேயில்லை. நீ என்னை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. நாம் முழுவதுமாக முற்றிலுமாக அந்நியராயிருக்கிறோம். ஆனால், தேவன் உன்னை அறிவார். அவர் என்னையும் அறிவார். என்னால் உன்னை சுகமாக்க முடிந்து, அல்லது உன்னுடைய கக்க தண்டங்களை அல்லது அது என்னவாக இருந்ததோ அதை எடுக்க முடிந்து, அதை செய்யாமல் இருப்பேனானால், நான் ஒரு கொடுமை யானவனாக இருப்பேன். சீமாட்டியே, என்னால் அதை செய்ய முடியாது. சுகமாக்க என்னிடம் ஒன்றுமில்லை, அல்லது வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. அது இயேசு கிறிஸ்துவிலும் உன்னுடைய விசுவாசத்திலும் உள்ளது. நாங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவெனில், வார்த்தையை பிரசங்கம் பண்ணுவதோ அல்லது ஏதோவொரு தெய்வீக வரத்தின் மூலமாக உன்னுடைய விசுவாசத்தை அந்த இடத்திற்கு உயர்த்தச் செய்வதே. அது சரியல்லவா? நீ அதை விசுவாசி. 94.இப்பொழுது, நீ என்னை அப்படியே தேவனுடைய ஊழியக்காரனாகப் பார்க்கிறாய். நீ - நீ மிகவும் வியாதிப்பட்டுள்ளாய். அது ஒரு... நீ - நீ, அது இருந்தது, உனக்கு அதற்காக முன்பு ஜெபிக்கப்பட்டிருக்கிறது. அது ஏதோ ஒரு வகையான இரத்தப்போக்கு அல்லது புற்று நோய். ஒரு வகை யான அலையலையான முடிகளுள்ள ஒரு உயரமான மனிதர் ஜெபித்தார். நீ சுகமடைந்தாய். அது சகோதரன் ஜாகர்ஸ். நான் அவரைக் கண்டேன்; அது சகோதரன் ஜாகர்ஸ். அவர் தன்னுடைய முதுகை எனக்குக் காட்டியபடி திரும்பி நிற்பதை இங்கே நான் காண்கிறேன், சற்று பிறகு. நீ - நீ வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறாய்... ஒரு நிமிடம், இப்பொழுது... உன்னுடைய தொண்டையில் ஏதோவொன்றுள்ளது. அது இங்கே தொண்டையிலுள்ள ஒரு உணவுக்குழல். நீ - நீ குழந்தையின் ஆகாரத்தை உண்கிறாய், வெறுமனே குழந்தையின் ஆகாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய். மேலும் - மேலும் - மேலும் உனக்கு கீல்வாதமும் கூட உள்ளது, அது உன்னை முடமாக்கிப் போட்டது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றி செலுத்துவோம். தேவன் உன்னை ஆசீர் வதிப்பாராக. சகோதரியே, மேடையை விட்டுப் போகலாம். 95.ஓ, தேவனே, எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய தயைக்காகவும், இரக்கத்திற்காகவும், உம்முடைய அன்பிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய தயவானது ஜனங்கள் மேல் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், கர்த்தராகிய இயேசுவின் வல்லமையானது இன்றிரவு ஒவ்வொரு வரையும் சுகமாக்குவதாக. அவருடைய மகத்தான சர்வவல்லமையுள்ள ஆசீர்வா தங்கள் இந்தக் கூட்டத்தை நீர் விரும்புகிறபடியான மகத்தான கூட்டமாக ஆக்குவதாக, இயே... 2